பொருத்து வீடுகளை நிர்மானிக்கும் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை – சுவாமிநாதன்:

65000 பொருத்து வீடுகளை நிர்மானிக்கும் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை என புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
65000 வீடுகளை அமைக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இந்த திட்டம் இடைநிறுத்தப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 65000 வீடுகளை நிர்மானிக்கும் திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என அ வா குறிப்பிட்டுள்ளார். வீடமைப்பு திட்டம் குறித்து மீளாய்வு செய்யும் நோக்கில் குழு நியமிக்கப்படவில்லை எனவும், காணிப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.
Related posts:
யாழ்.மணியம்தோட்டம் பகுதியில் ஷெல் வெடித்து நபரொருவர் படுகாயம்!
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மே 08 முதல் ஆரம்பம்!
வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்’பட்...
|
|