பொரளையில் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கடத்தல்; விசாரணை ஆரம்பம்!

Saturday, September 10th, 2016

பொரள்ளை பகுதியில் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டும் வெட்டுக்காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் விகாரைக்கு சென்று மீண்டும் கடமைக்கு திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கடத்தப்பட்ட நபர் சிறிது நேரத்தின் பின்னர் மெகஸின் சிறைச்சாலைக்கு முன்பாக விடப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.இதன்படி, குறித்த சிறைச்சாலை அதிகாரி பாதுகாப்புக்கு மத்தியில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறைச்சாலை அதிகாரியின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சிறைச்சாலை அதிகாரி சிறைச்சாலையின் ஒழுக்காற்று பிரிவில் கடமையாற்றி வருகின்றார்.இந்த கடத்தலுக்கான காரணம் மற்றும் கடத்திய நபர்கள் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

investigation-630x286-415x260

Related posts: