பொன்னாலை வரதராஜப் பெருமாளுக்கு இன்று கொடியேற்றம்!

Tuesday, August 9th, 2016

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று (09) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் பலர் அங்கப்பிரதட்சணை செய்தும் அடியழித்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றினர். பக்தர்களின் வசதி கருதி ஆலயத்தில் உள்ள கண்ணன் மடாலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. தாகசாந்தி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து செல்வதற்காக யாழ்ப்பாணம் – காரைநகர் இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இ.போ.ச, தனியார் பேருந்துகள் ஆலயத்தினூடாக சேவையை மேற்கொண்டன. தொடர்ச்சியாக இந்த சேவை இடம்பெறவுள்ளது. அடுத்துவரும் 18 தினங்கள் இடம்பெறவுள்ள இந்த பெருந்திருவிழாவில் எதிர்வரும் 25 ஆம் திகதி இரதோற்சவம் இடம்பெறும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts:

அனைத்து வீதிகளினதும் தரம் தொடர்பில் ஆராய விசேட பிரிவு ஸ்தாபிக்க நடவடிக்கை - அமைச்சர் திலும் அமுனுகம ...
சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க ஆலோசனை - சுகாதார அமைச்சர்...
அரசிடமே பெரும்பான்மை உள்ளது - இல்லையென நிரூபித்தால் நாடாளுமன்றம் கலைப்பு - எதிரணியின் யோசனைப்படி த...