பொன்னாலை மேற்குக்கு குழாய் மூலம் குடிதண்ணீர்!

Monday, December 5th, 2016

7.9 மில்லியன் ரூபா வழங்கியது வேள்விசன்மீள்குடியேற்றக் கிராமமான பொன்னாலை மேற்குப் பிரதேச்திற்கு நெல்லியான் பிரதேசத்தில் இருந்த குழாய் மூலம் தண்ணீர் வழங்க 7.9 மில்லியன் ரூபாவை வேள்ட்விசன் லங்கா நிறுவனம் வழங்கியுள்ளது என வேள்ட்விசன் லங்கா செயற்பாட்டு முகாமையாளர் ஆர்.ஜெயால்ட் அன்ரனி தெரிவித்துள்ளார். வலி.மேற்கு பிரதேச சபையில் இடம்பெற்ற பிரதேச சபையின் உள்ளுராட்சி மாத இறுதிநாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் 3மில்லியன் ரூபா செலவில் 300க்கும் மேற்பட்ட மலசலகூடங்கள் வலி.மேற்கில் வேள்ட்விசனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்வில் தேசிய வாசிப்பு மாதத்தில் வலி.மேற்கு மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு நூலகர். கு.பா.விஜயகுமாரின் ஒருங்கிணைப்பால் பெறுமதி வாய்ந்த நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

news_08-05-2016_9283297465-1-_crop_615x324

Related posts: