பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் குழு  அறிக்கை ஒக்டோபரில் சமர்ப்பிக்கப்படும்- சுனில் ஹந்துன்நெத்தி!

Thursday, September 8th, 2016

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் குழு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதியன்று தமது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

கோப் குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார் மத்திய வங்கியின் முறிகள் தொடர்பிலான கோப் குழுவின் விசாரணைகள், கிடப்பில் போடப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

இதன்போது ஹந்துன்நெத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் தினத்தை அறிவித்தார்.இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் விவாதம் நடத்தப்படும் என்றும் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

i3

Related posts: