பொது இடத்தில் மதுபானம் அருந்திய இருவருக்கு 15000 ரூபா அபராதம்!

Sunday, September 25th, 2016

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மேலும் இருவர் பொது இடத்தில் மதுபானம் அருந்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து 15000 ரூபா தண்டப்பணமும் அறவிடப்பட்டதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநகர் பகுதியில் இரவு வேளைகளில் பொது இடங்களில் நிற்கவோ, மதுபானம் அருந்தவோ வேண்டாம் என பொலிஸார் பல்வேறு தடவைகள் கூறியிருந்தனர். எனினும் இதனை மீறி தொடர்ந்து இளைஞர்கள் வீதிகளில் நின்ற வண்ணம் உள்ளதுடன் மதுவும் அருந்தி வருகின்றனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ் பொலிஸார் கடற்கரை வீதியில் மதுபானம் அருந்திய நிலையில் இரு இளைஞர்கள் கைது செய்துள்ளனர்.

எனினும் குறித்த இளைஞர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதுடன், குறித்த நபர்களுக்கு 15000 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்னரும் குருநகர் பகுதியில் வைத்து இரண்டு பேர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

23-1469248907-law-1-600

Related posts: