பொதுமன்னிப்பு காலம்!
Thursday, July 13th, 2017தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்கள் தண்டனையின்றி நாடு திரும்புவதற்கானன பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுமன்னிப்புக் காலம் ஜூலை 10ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தென் கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் நாடு திரும்ப வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள இலங்கை தொழிலாளர்களை கேட்டுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் மீண்டும் நாடு திரும்பும் தொழிலாளிகளுக்கு எதிராக எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாதென்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
Related posts:
அரசியலில் பெண்கள் பங்கு இலங்கைக்கு 179ஆம் இடம்!
ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்கள் இந்த வாரம் மீள் ஏற்றுமதி!
பாதுகாப்பு செயலாளர் - அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் சந்திப்பு - இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத...
|
|