பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!

Monday, October 4th, 2021

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் இன்றுமுதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எனினும் மறுஅறிவித்தல்வரை ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாதெனவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுகாதார வழிகாட்டல்களுக்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் கையடக்க தொலைபேசி மூலம் 225 க்கு அழைத்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

அதேபோல,  ஆயிரத்து 225 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: