பொதுமக்களிடம் கோரிக்கை!

இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான மக்களின் சுகாதார தரத்தை சோதனை செய்ய, விசேட மருத்துவ குழுக்கள் பல, குறித்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தொற்று நோய் ஏற்பட்டதாக இதுவரையில் தகவல் இல்லை என குறிப்பிட்டார்
எனினும் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண குறிப்பிட்டார் இதனிடையே, குடிநீருக்காக பயன்படுத்தும் நீர் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சுகாதார அமைப்புகள் பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன நாட்டில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் ஊடாக தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் குடிநீருக்கான பயன்படுத்தும் நீரை சுத்திகரித்து பருகுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது
Related posts:
|
|