பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை!

Saturday, May 2nd, 2020

ஊடுருவல் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்படி பேஸ்புக் பயனர்கள் ஒரு பேஸ்புக் நண்பரிடம் இருந்து இணைப்பு உட்பட்ட ஏமாற்றும் செய்தி ஒன்றை பெறுவார்கள்.

பயனர் அந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் அது ஒரு போலியான பேஸ்புக் பக்கத்துக்கு அனுப்பப்படும்.

மேலும் பயனர் நற்சான்றுகளை உள்ளிட்ட பின் அது தாக்குபவரினால் கைப்பற்றப்படும்.

குறித்த பேஸ்புக் கணக்கை சமரசம் செய்தபின்னர் தாக்குபவர் அந்தக்கணக்கை பயன்படுத்தி அதன் நண்பர்களின் பட்டியலுக்கு ஒத்தவகையான செய்திகளை அனுப்புவார். இதனடிப்படையில் தாக்குதல்கள் தொடரும்.

எனவே பேஸ்புக்கில் நண்பர்கள் அனுப்பும் இணைப்புக்களை கிளிக் செய்வதை தவிர்க்குமாறு இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழு கோரியுள்ளது.

அத்துடன் பயனர் நற்சான்றிதழ்களை உள்ளிடும்போது உண்மையான பேஸ்புக் பக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் இலங்கை கணணி அவசர தயார்நிலை அணி ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.

Related posts: