பேருந்து மீது தாக்குதல்.!

Sunday, July 17th, 2016

தர்மபுரம், நெத்தலியாறு பகுதியில் வைத்து தனியார் பேரூந்து மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்படுள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

முரசுமோட்டை பகுதியில் சமாந்தரமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள் களை முந்திச் செல்வதற்காக பேருந்து சாரதி ஒலிச் சமிக்ஞை செய்துள்ளார்.இதனால் பேருந்தை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வழி மறித்ததனால் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது.

பின்பு தர்மபுரம் நெத்தலியாறு பகுதியில் வைத்து பேரூந்தை மீண்டும் வழிமறித்த அவர்கள் சாரதியை தாக்குவதற்கு முற்பட்டதோடு பேருந்தின் முன் கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர்.

அவ்விடத்தில் வைத்தே தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட சம்பவத்தை விசாரித்த பொலிசார் ஒரு மணி நேரத்துக்குள் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப் பட்டவர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவானின் வாசல் தளத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக தர்மபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts: