பேருந்து கட்டணம் 6 வீதத்தால் உயர்வு!

Tuesday, July 12th, 2016

பேருந்து  கட்டணம் அதிகரிப்பது தொடர்பிலான அறிக்கை இன்று அமைச்சரவையில் ஒப்படைக்கப்படவுள்ளது.

நேற்றறைய தினம் இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் கலந்துறையாடியதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தா்ர் . பேருந்து ஊழியர்கள் சங்கள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அமைச்சரவைக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க மேலும் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் ஐூலை மாதம் முதலாம் திகதி பேருந்து கட்டணம் அதிகரிப்டும், 2013 ஆம் ஆண்டு 13 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.

பின்னர் 2015 ஆம் ஆண்டு பெற்றோல் விலை குறைவடைந்ததன் காரணமாக அது 8 வீதத்தினால் குறைவடைந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்.

தற்போதை நிலைமையை கருத்தில் கொண்டு 6 வீதத்தினால் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: