பேருந்துக்கான காத்திருந்தவர்களை திடீரென மோதித் தள்ளியது ஆட்டோ!

Tuesday, November 22nd, 2016

பேருந்திற்காக காத்திருந்தவர்களை எதிர்பக்கமாக வந்த ஆட்டோ மோதித்தள்ளியதில் நால்வர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12மணியளவில் மந்திகை பேருந்து தரிப்பிட நிலையத்தில் இடம்பெற்றது. இதில் வீரபத்திர கோவில் புலோலி தெற்கைச் சேர்ந்த கதிரவேல் யோகராசா (வயது-55), வரணி வடக்கைச் சேர்ந்த தம்பு உருத்திலமூர்த்தி (வயது-57), கடுகம்பன் புலோலி தெற்கைச் சேர்ந்த சுப்பையா சிவஸ்வரன் (வயது-52), என்போர் படுகாயங்களுக்குள்ளாகினர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து பாதணி, கைத்தொலைபேசி, மூக்குக் கண்ணாடி என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர். வைத்தியசாலையில் கிளினிக் முடிவடைந்ததன் பின்னர் பேருந்திற்காக காத்திருந்தவர்களே படுகாயங்களுக்குள்ளாகினர். இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆட்டோ சாரதியும் முகத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

201503220448526180_Dindigul-in-the-accident-including-the-woman-caught-in-the_SECVPF-720x480

Related posts:

இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை மிக நெருக்கமாகவே பேணி வருகின்றோம் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த...
இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகள் தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
கடும் மழையுடனான வானிலையே மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் - ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்...