பேருந்தில் மரக்குற்றி கடத்திய மூவர் கைது!

Friday, September 30th, 2016

பேருந்தில்  கடத்தப்பட்ட 4 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளுடன் மூவர்  இன்று அதிகாலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்  பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸாருக்கு ரகசிய தகவான்று கிடைத்தது.இதையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப்  பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின்படி  உதவிப்பொலிஸ் பரிசோதகர்  இந்து பிரதீபன், லால் குமார, சிறி ஏக்கநாயக்க, சோமரட்ன, சியாம், சிவஐங்கரன் ஆகியோர் கொண்ட சிறப்புக் குழுவினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் வடகாடு மாங்குளம் காட்டுப்பகுதியில் வைத்து கிளிநொச்சி யாழ்ப்பாணம் வழித்தடங்களில் பயணிக்கும் பேருந்துகளை சோதனையிட்டனர்.

இவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது குறித்த வழித்தடங்களில் பயணித்த பேருந்து ஒன்றில் கடத்தப்பட்ட  சுமார்   நான்கு இலட்சம் ரூபா  பெறுமதியான   12  அடி நீளமான 6×4 அளவுடைய 55 பாலை  மரக்குற்றிகளுடன்  சந்தேக நபர்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: