பேராதனை பல்கலைதொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகள் ஆரம்பம்!
Wednesday, August 24th, 2016பேராதனை பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளக விசாரணையின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பேராதனை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் உப்புல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் சிலர் இரண்டாம் வருட மாணவர்களால் நேற்றிரவு தாக்கப்பட்ட சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஐந்து மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவிததுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து தாக்குதலுக்கு இலக்கான மாணவர்களால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
|
|