பெறுமதி வாய்ந்த தேக்கம் குற்றிக்கள் கைப்பற்றப்பட்டன!

Thursday, April 21st, 2016

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்பட்ட 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 தேக்கம் குற்றிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கன்டர் ரக வாகனம் ஆகியவற்றை நேற்று  (20) கைப்பற்றியதாக, பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தேக்க மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக பளைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முகமாலைப் பகுதியில் வீதித் தடையை ஏற்படுத்தி, வாகனத்தை பிடிக்க முற்பட்டனர். எனினும், வாகனம் நிற்காமல் தொடர்ந்து சென்றமையால், வாகனத்தைப் பொலிஸார் துரத்திச் சென்றனர்.

பொலிஸாரின் துரத்தலுக்கு ஈடுகொடுக்க முடியாத கடத்தல்காரர்கள், வாகனத்தை கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். பிடிக்கப்பட்ட வாகனம் விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

Related posts: