பெரும்போகத்தில் கூடுதலான விளைச்சலை எதிர்பார்க்கமுடியாது – கலாநிதி விஜயகோன்!

Friday, December 16th, 2016

பெரும்போகத்தில் கூடுதலான விளைச்சலை எதிர்பார்க்க முடியாதென விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜயகோன் தெரிவித்துள்ளார்.

குறுகிய கால பயிர்ச் செய்கை அடிப்படையில் மேலதிக பயிர்களை பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்த வேண்டுமென விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்
கௌபி, சோயா, உழுந்து போன்ற பயிர்களை பயிரிடும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கான விதைகள் இலவசமாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆறு இலட்சம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் இரண்டு லட்சத்து 53 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் மட்டுமே நெற் செய்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கலாநிதி விஜயகோன் மேலும் தெரிவித்தார்.

140256964a42a3c91c4b45fc8695f200_XL

Related posts: