பெருமை தேடித்தந்த மாணவனுக்கு கௌரவிப்பு!

Thursday, February 22nd, 2018

அச்சுவேலி மத்திய கல்லூரி வரலாற்றில் முதன் முறையாக கணிதப்பிரிவில் கல்வி கற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவான அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த தில்லைநாதன் தஜிதரன் என்ற மாணவன் பாடசாலை சமூகத்தினரால் நேற்று புதன்கிழமை கௌரவிக்கப்பட்டார்.

அச்சுவேலி மத்திய கல்லூரியில் ஆரம்பகாலத்தில் கலைப்பிரிவு மற்றும் வர்த்தகபிரிவு வகுப்புகளே இடம்பெற்றுவந்தன. கல்லூரியின் வளர்ச்சியையும் மாணவர்களின் பெறுபேறுகளின் அதிகரிப்பையும் அடுத்து கணிதப்பிரிவு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்ட இம் மாணவன் யாழ் நகரப் பகுதியில் உள்ள எந்தவொரு பாடசாலைக்கும் செல்லாமல் தனது ஊர் பாடசாலையில் கல்வி கற்று நடந்து முடிந்த 2017 உயர்தரப் பரீட்சையில் தோற்றி  2 ஏபி சித்திகளை பெற்று பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

நேற்றைய தினம் இம் மாணவன் அச்சுவேலி வைரவர் கோயிலிலிருந்து பான்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டு கல்லூரியில் வைத்து கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வில் மாணவனின் பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனர்.

Related posts: