பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரிசிக்கு நிவாரணம் தர  கோரிக்கை!

Thursday, December 22nd, 2016

அரிசி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரிசிக்கு நிவாரணம் கோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அரிசியின் விலை உயர்வடைந்த போதிலும் தொடர்ந்தும் குறைந்த சம்பளத்தையே பெற்று வருவதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்டப் பகுதிகளில் ஒரு கிலோ நாடு அரிசி 95 ரூபா – 100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

எனவே அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரிசிக்கு நிவாரணம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

rice-1

Related posts: