பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் !

கடந்த நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது அதன் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் தற்போது பெரிய வெங்காயத்தின் கிலோ ஒன்றிற்கான விலை 105 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்று 50 முதல் 55 வரையில் காணப்பட்டது.
இந்நிலையயில் மாத்தளை, தம்புள்ளை, சீகிரிய மற்றும் நாஉல ஆகிய பகுதிகளிலிருந்தும் பெரிய வெங்காயங்கள் சந்தையில் விற்பனைக்கு வருவதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
காணாமல் போனோர் சான்றிதழ் வழங்கும் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்!
வடமாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையான கண்டனம்!
பயங்கரவாத தாக்குதல் - 23 சிறுவர்கள் உயிரிழப்பு!
|
|