பெயர்ப் பலகை பதாகையில் தமிழ் எழுத்துப் பிழைகள் – பொதுமக்கள் சுட்டிக்காட்டு!

வவுனியா – கண்டி வீதி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகை பதாகை ஒன்றில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாகப் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வவுனியா – கண்டி வீதியிலுள்ள மாவட்டச் செயலரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்லும் முதன்மை வாசலிலும் நீதிமன்றத்துக்கு முன்பாகவும் உள்ள முதன்மை வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீதிப் பெயர்ப் பலகையிலேயே இவ்வாறு எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன.
ஹொறவப்பொத்தான வீதி என்பதற்கு பதிலாக ஹொறவப்பொத்தாள வீதி என்று வீதிப்பலகையில் பதிவேற்றப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவை அரச கரும மொழிகள் அமைச்சரின் செயற்பாட்டில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதுடன் அமைச்சரின் இணைப்பாளர்கள் மாவட்ட செயலகத்தில் உள்ள அரச கரும மொழிகள் பிரிவு என்பவர்களின் கண்களில் தெரியவில்லையா? என்ற கேள்வியையும் வவுனியாவில் வசித்து வரும் தமிழ் மக்கள் எழுப்பியுள்ளனர்.
தவறுகள் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் தமிழ் மொழியில் அரச உயர் அதிகாரிகள் பணியாற்றும் வவுனியா பகுதியில் இவ்வாறான ஒரு செயற்பாட்டில் தவறு ஏற்பட்டுள்ளது என்பது தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகவுள்ளது. இது தொடர்பில் அரச கரும மொழிகள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களால் கோரிக்கை விடப்பட்டது.
Related posts:
|
|