பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா:  மாட்டினார் மருத்துவர்!

Thursday, August 10th, 2017

அனுராதபுர அரச வைத்தியசாலையில் கணக்காய்வாளர் பிரிவில் அமைந்துள்ள பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் இரகசிய கேமராவோன்றை பொருத்திய மருத்துவர் ஒருவருக்கு எதிராக பொலிசார் அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

பொலிசார் சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையை ஆராய்ந்த நீதிபதி, சம்பந்தப்பட்ட மருத்துவரை எதிர்வரும் 15ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

அனுராதபுர அரச வைத்தியசாலையில் கணக்காய்வாளர் பிரிவில் பணியாற்றும் பெண்கள் சிலர் சமர்ப்பித்த புகாரை அடுத்து பொலிசார், சம்பந்தப்பட்ட மருத்துவரை அழைத்து விசாரணையை மேற்கொண்டனர்.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மருத்துவர் நிராகரித்திருந்தார். அதன் பின்னர் கைவிரல் அடையாளம் தொடர்பான விசாரணைகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் வழங்கிய வாக்குமூலங்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு எதிராக பொலிசார் இந்த குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இருப்பதாக சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனையை அடுத்து இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அவர்கள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஒரு மருத்துவருக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts: