பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி இரத்து – சுகாதார அமைச்சு தகவல்!
Monday, May 2nd, 2022பூரண கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட 2264/09 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 101வது உத்தரவு, சுகாதார அமைச்சரினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 53,000 இற்கும் அதிகம்!
மாணவர்களுக்கான TAB கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி !
நீதிக்கான அணுகலில் எந்தவிதமான பாகுபாடும் கிடையாது – நீதி அமைச்சர் அலி சப்ரி!
|
|