பூநகரி பிரதேசத்தில் மின்சாரம் இல்லாத 430 குடியிருப்புக்கள்!

Wednesday, December 20th, 2017

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் 430 இற்கு மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்புகள் வளங்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகிரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பிரதேசங்களில் மீள் குடியேறிய 5700 இற்க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்னிணைப்புக்கள் வழங்கப்படவுள்ள போதிலும் 430 இற்கு மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் வழங்க வேண்டியிருப்பதாக பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறிப்பாக மீள் குடியேற்றத்தின் பின்னர் இந்த மக்களுக்கு மின் இணைப்புக்கள் வழங்கப்பட்ட போதும் அரசியல் ரீதியாக குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள மக்கள் பழிவாங்கப்பட்டிருப்பதாக  பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்ப்பட்;டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: