புழுக்களினால் 100 வகையான பயிர்களுக்கு ஆபத்து!   

Saturday, November 24th, 2018

சோளத்தை அழிக்கும் புழுக்களினால் 100 வகையான பயிர்களுக்கு ஆபத்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இப்புழு தீவிரமாக பரவுவதற்கு முன்னர் பாதிப்பை கட்டுப்படுத்த பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பயன்படுத்துமாறு விவசாயத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இப்புழுக்களின் பாதிப்பை இனங்கண்டால், விவசாய ஆலோசனை சேவையின் 1920 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் அல்லது உடனடியாக தங்களது பிரதேச விவசாய வெளிக்கள உத்தியோகத்தரிற்கு அறிவிக்குமாறும் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

 

Related posts: