புளியங்குளத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு!

Friday, December 9th, 2016

வவுனியா – புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (08) புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வி.எஸ்.டி.விதானகே தலைமையிலான ல் பொலிஸ் உத்தியோகத்தர் குழு தேடுதல் மேற்கொண்டது.

இதன்போது லான்ட் மாஸ்ரர் வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில் அரிந்து எடுக்கப்பட்ட முதிரை மரங்கள் மீட்கப்பட்டதுடன், குறித்த வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் இன்று வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று புளியங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

download

download (1)

Related posts:


இராணுவத்தளபதி வேண்டுகோள் - இராணுவத்தினருக்கான உணவுக் கொடுப்பனவுத் தொகை ஜனாதிபதியால் அதிகரிப்பு!
குருதி சீராக்கத்திற்கான உபகரண பற்றாக்குறை விரைவில் நிவர்த்திக்கப்படும் - சுகாதார அமைச்சர் கெஹெலிய தெ...
குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு - லேடி ரிட்ஜ்வே குழந்தை நல மரு...