புலோலியில் நள்ளிரவில் கொள்ளையர்கள் கைவரிசை! 

Monday, April 15th, 2019

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகை தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், புலோலி தெற்கு, புற்றளைப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்நுழைந்துள்ளனர். இதன்போது வீட்டாரை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர்களிடமிருந்த 17 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.