புலம்பெயர் தமிழர் கருத்தை நாடும் பேரவை!
Tuesday, March 8th, 2016புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பான தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை கேட்டுள்ளது.
அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது –
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றதும், இதில் மக்கள் மிகவும் உட்சாகத்துடன் பங்குபற்றுவதும் மிகவும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் புலம்பெயர்ந்துள்ள எங்கள் உறவுகளின் வகிபங்கு மிகவும் அவசியமானது. எனவே, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில், புலம்பெயர் தமிழ் உறவுகள் தங்களின் கருத்துக்களை தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்பு ரீதியாகவோ பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது..
Related posts:
தபால் சேவையும் இடைநிறுத்தம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – பதிலளிக்க தயாராக இருப்பதாக இலங்கை ...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை - அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு - பெற்றுத்தர முயற்...
|
|