புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரீட்சையின்போது பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது. பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும்.
பகுதி ஒன்று வினாப்பத்திரம் கடினமானது என்பதால் பாட விடயதானங்கள் அடங்கிய பகுதி இரண்டின் வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்று பிரதமர் ரணில் ஹொங்கொங் பயணம்!
புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி பட்டியல் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பு!
மாலை 6.15க்கு விளக்கேற்றி அஞ்சலிக்குமாறு வேண்டுகோள்!
|
|