புலமைப்பரிசில் பரீட்சை எந்த சிக்கலும் இன்றி நிறைவடைந்துள்ளது பரீட்சைத் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, August 7th, 2018

3050  நிலையங்களில் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எந்த சிக்கல்களும் இன்றி நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த முறை புலமைப்பரீட்சையில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பங்குபற்றினர்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற பரீட்சையின் வினாத்தாள்களை கையிருப்பில் வைத்திருத்தல், விற்பனை செய்தல், அச்சிடல் மற்றும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பரீட்சையில் விடையளித்தமை மற்றும் பரீட்சை தொடர்பில் தேவையற்ற கேள்விகளை மாணவர்களிடம் கேட்க வேண்டாமென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஊடக அறிக்கை மூலம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: