புன்னாலைக்கட்டுவன் வடக்கில் இரு மோட்டார்க் குண்டுகள் மீட்பு!

Friday, August 11th, 2017

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கிலுள்ள வீட்டுக் காணியொன்றிலிருந்து இரு மோட்டார்க் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த யுத்த காலத்தில் குறித்த பகுதியில் அமைந்திருந்த வீட்டினை இராணுவத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர். இராணுவத்தினர் விட்டுச் சென்ற பின்னர் வீட்டு உரிமையாளர்களின் பொறுப்பிலிருந்த வீட்டுக் காணியைத் துப்பரவு செய்த போது இரு மோட்டார்க் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் புதன்கிழமை(09) நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், விசேட அதிரடிப்படையின் உதவியுடனும் குறித்த  இரு குண்டுகளும் மீட்கப்பட்டுச் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

Related posts: