புதையல் தேடிய நால்வர் கைது !

Thursday, August 11th, 2016

செட்டிக்குளத்தில் புதையல் தோண்டிய நால்வர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது-

செட்டிக்குளம் அரசடிக்குளம் பகுதியில் நேற்று (10) அகழ்வுப்பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அநூராதபுரம்,முதலியார்குளம்,நேரியகுளம் ஆகிய பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்திய ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts: