புதுப்பிக்கத்தக்க சக்திக்கு இடமளிக்கும் திட்டங்களுக்கு மின்சார சபை அனுமதிக்கிறது – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022

இலங்கை மின்சார சபையானது புதுப்பிக்கத்தக்க சக்தியை மின் கட்டமைப்பிற்கு இடமளிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடலை முன்னெடுத்ததாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஆறு மாத கலந்துரையாடலுக்குப் பின்னர் மின்சார சபை அதிகாரிகள் இறுதியாக 2022-2026 க்கு இடையில் தற்போதுள்ள கட்டத்திற்கு 2,800 மேலான மெகாவாட் புதுப்பிக்கத்தக்க சக்தியை இடமளிக்கும் திட்டத்தை வரைந்துள்ளனர்.

இதன் மூலம் இலங்கை மின்சார சபை மற்றும் கடற்பரப்புக்கு பல வேலைத்திட்டங்களுக்கு இடமளித்து துரிதப்படுத்த முடியும் என அமைச்சர் விஜேசேகர குறிப்பிட்டார்.

தற்காலிக அனுமதி பெற்ற 226 திட்டங்களில் 170 க்கும் மேற்பட்ட திட்டங்கள், எரிசக்தி அனுமதி பெற்ற 48 திட்டங்கள், அடையாளம் காணப்பட்ட பாரிய அளவிலான திட்டங்கள், அனைத்து விலைமனுக்கோரல் செய்யப்பட்ட திட்டங்கள் மற்றும் கூரை சூரிய திறன் கொண்ட திட்டங்களுக்கு இடமளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

ஏனைய திட்டங்களுக்கு தேவையான பரிமாற்றம் மற்றும் கட்டம் மேம்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விடுமுறை காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டரீதியானதா? - விளக்கம் கோரி சட்ட மா அதிபரி...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் மோதல் – இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!
காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 455 கிமீ தொலைவில் மையம் - இடியுடன் கூடிய பலத்த மழை வளி...