புதிய பிரதமரின் தெரிவுக்காக நாளை கூடுகிறது நாடாளுமன்றம் !

Friday, July 15th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாளை 16 ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத்தை கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று கூடவிருந்த போதிலும் ஜனாதிபதியின் இராஜினாமா தாமதம் காரணமாக அது நடைபெறவில்லை. இதே நேரம், இன்று இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டத்தில் புதிய பிரதமரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் வெற்றிடமாகும் ரணிலின் தேசிய பட்டியல் இடத்திற்கு ஐ.தே.கவின் பிரதி தலைவரும், ரணில் விக்கிரமசிங்கவின் உறவினருமான, ருவான் விஜேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: