புதிய பரிணாமம் பெறவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்!
Tuesday, November 7th, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதைகளின் தரம் மேம்படுத்தப்படவுள்ளது.அதேவேளை புதிய ஓடுபாதைகளையும் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பணிப்பாளர் ஜோனல் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.வருடாந்தம் மேலும் 20 இலட்சம் பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது. 60 லட்சம் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையை பயன்படுத்துவதாக நிறைவேற்று பணிப்பாளர் ஜோனல் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.ஓடுபாதை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஒரு கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர்களில் இருந்து ஒரு கோடியே 90 லட்சம் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 2018 ஆம் ஆண்டளவில் ஓடு பாதையில் அதிக அளவிலான விமானங்களை ஏற்றி இறக்க முடியும்.தற்போது கட்டுநாயக்க வரும் விமானங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதனால் பயணிகளை துரித கதியில் கையாள்வதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
Related posts:
|
|