புதிய அரசியலமைப்பு 40 வருடங்களுக்கேனும் நிலைத்திருப்பதாக அமைக்கப்பட வேண்டும்!

Sunday, April 10th, 2016

தற்போது நாட்டில் உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு வரும் 40 வருடங்களுக்கு உயிர் வாழும் ஒன்றாக இருக்க வேண்டும். அத்துடன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதனை ஏற்றுக் கொள்வதாக அமைய வேண்டும் என்று அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரங்கள் முடிந்தளவு பகிரப்பட்டுள்ளமையை புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்..

மேலும் அவர் கூறியதாவது –

வடக்கு மாகாண சபைகளை பொறுத்தவரை அந்த மாகாண சபைகளுக்கு 13வது திருத்தத்தின் ஊடாக அதிக அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.இதனைவிட அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனில். அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்றும் சுசில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே 1978ம் ஆண்டு அரசியல் அமைப்பு 19 தடவைகளாக திருத்தப்பட்டுள்ளன. எனவே புதிய அரசியலமைப்பு 40 வருடங்களுக்காவது நிலைக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Related posts: