புதிய அரசியலமைப்பு தொடர்பில் பிரித்தானிய சட்ட அறிஞர்கள்!

Sunday, September 25th, 2016

தற்பொழுது உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு திட்டம் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக பிரித்தானியாவை சேர்ந்த சட்ட அறிஞர்கள் இருவர் இலங்கைக்கு நாளை வருகைதரவுள்ளனர்.

இவ்வாறு நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்பவர்கள் கிரமன் ஜெஃப்ரி ஜோயல் மற்றும் டேனியேன் சிரன்பர்கே எனும் இரு சட்ட அறிஞர்கள் என லால் விஜயநாயக்க கூறியுள்ளார்.

இவர்கள் புதிய அரசியலமைப்பு திட்டம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காகவே நாட்டுக்கு வருகைதருவதாக புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்தறிய உருவாக்கப்பட்ட குழுவின் தலைவரும் சட்டதரணியுமான லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் புதிய அரசிலமைப்பு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில், நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

Related posts: