புகைவண்டி மோதியதில் பாடசாலை மாணவி பலி!

Saturday, July 23rd, 2016

காலி, அம்பலாங்கொடை அருகேயுள்ள கரித்தகந்த பிரதேசத்தில் புகைவண்டியால் மோதுண்டு பாடசாலை மாணவியொருவர் பலியாகியுள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில். தனியார் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயதான பாடசாலை மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டையில் இருந்து அம்பலாங்கொடை நோக்கி  சென்றுகொண்டிருந்த  புகையிரதமே குறித்த மாணவியை மோதியுள்ளது. .சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: