புகையிலை செய்கையில் வடமராட்சி விவசாயிகள் ஆர்வம்!

வடமராட்சி பிரதேசத்திலுள்ள விவசாயிகள் புகையிலை செய்கைக்கான புகையிலை நாற்று மேடைகளை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் பெய்த சிறுமழையை அடுத்து வடமராட்சி பிரதேசத்தில் திக்கம், மந்திகை, புலோலி, அல்வாய், கரணவாய் போன்ற இடங்களில், புகையிலை நாற்று மேடைகளை அமைப்பதில் புகையிலை செய்கையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் புகையிலை நாற்றுக்கள் நடுகை செய்யப்படும்.
இதேவேளை குடாநாட்டில் புகையிலைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் வலிகாமம், தென்மராட்சி, தீவகத்தைச் சேர்ந்த விவசாயிகள், வடமராட்சி விவசாயிகளிடமிருந்து புகையிலை நாற்றுக்கள் பெற்றுக்கொள்வது வழக்கமாகும்.
ஆனால், இம்முறை தீவகத்தில் புகையிலைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள பிரதேச செயலகத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பணப்பயிரான புகையிலையை பயிர்ச்செய்கை மேற்கொள்வதை, எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கு மாற்றுப்பயிர் தொடர்பான விபரங்களையோ, விளக்கங்களையோ வழங்குவதற்கு விவசாயத் திணைக்களம் இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Related posts:
|
|