புகையிரத சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்!

Friday, May 14th, 2021

புகையிரத சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் அனைத்து புகையிரத சேவைகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் எந்தவொரு புகையிரதமும் சேவையில் ஈடுபடுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: