புகைப் பரிசோதனை சான்றிதழ் எடுத்துச் செல்லாமைக்கு ரூ.1000 தண்டம்!

Sunday, February 10th, 2019

வாகனம் செலுத்தும்போது புகைப் பரிசோதனை சான்றிதழ் எடுத்துச் செல்லாத சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் புகைப் பரிசோதனைச் சான்றிதழ் எடுத்துச் செல்லாத சாரதிக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது சான்றிதழை சாரதி காண்பித்ததையடுத்து அவர் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: