புகைத்தலுக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!

Wednesday, July 20th, 2016

புகைத்தலில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புகைத்தல் மற்றும் மது தொடர்பிலான தேசிய அதிகார சபையின் ஆய்வு தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு நூற்றுக்கு 8 வீதமாக காணப்பட்ட போதைபொருள் பாவனை கடந்த வருடம் நூற்றுக்கு 3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக புகைத்தல் மற்றும் மது தொடர்பிலான தேசிய அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு காரணிகள் இதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 13 வயது தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட 40,000 பாடசாலை மாணவர்கள் புகைத்தலில் ஈடுபட்டு வருவதாக புகைத்தல் மற்றும் மது தொடர்பிலான தேசிய அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் பாலித்த அபேகோன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: