பி.சி.ஆர். பரிசோதனை குறைக்கப்படவில்லை – இராணுவத்தளபதி அறிவிப்பு!

நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா வடக்கு மாகாணத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கமளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாளாந்த பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் இல்லை. தொற்று நோய் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே, பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதிகள் கையளிப்பு!
சீரற்ற காலநிலை - மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக 10 ஆண்டுகால தேசிய செயற்திட்டம் அறிமுகம் - சுற்றாடல் அம...
|
|