பிளாஸ்டிக் பயன்படுத்த தடை : மீறினால் அபராதம்!
Sunday, February 5th, 2017பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 மைக்ரோன் அளவிற்கும் குறைவான தடிப்பை கொண்ட பிளாஸ்டிக் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாடுகளுக்கு தடை விதித்திருந்தது.
குறித்த சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா அபராதமும் 2 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் குறித்த சட்டம் வடக்கில் அமுலாக்கப்படாத நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்திடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வானிலை மாற்றங்களால் விஷத்தன்மை - ஐ.நா எச்சரிக்கை
தலைக்கவசம் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முறைப்பாடு!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு – ஜனாதிபதி ரணில் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இரண்டு நாள...
|
|