பிறந்தநாள் வீட்டில் உணவுண்ட 10பேர் வைத்தியசாலையில் அனுமதி- கரணவாய் கொற்றாவத்தையில் சம்பவம்!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உற்கொண்ட உணவு நஞ்சானதால், 12 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி சி.சுதோகுமார் தெரிவித்துள்ளார்.
கரணவாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு பிறந்தநாள் ஒன்று நடைபெற்றது. இதில் நள்ளிரவு 11 மணியளவில் உணவு உட்கொண்டு விட்டு உறங்கச் சென்றவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்hர். இதனையடுத்து, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலமையிலான குழுவினர் வீட்டை பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். உணவு பழுதடைந்ததா அல்லது உணவிற்குள் விச ஜந்துக்கள் வீழ்ந்திருக்குமா என்பது தொடர்கபாக அறிய சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
இரவு நேரப் பூங்காவாக மாறுகிறது.தெஹிவளை மிருகக்காட்சி சாலை!
வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது!
பலத்த எதிர்பார்ப்புடன் கூடுகிறது நாடாளுமன்றம் - 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு மூன்றில் இரண்டு பெரும்பா...
|
|