பிரான்ஸ் வீதி விபத்தில் யாழ்ப்பாண மாணவன் பலி!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் வேலணை கிழக்கைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிஸ் 13 இல் அமைந்துள்ள boulevard massena என்னும் பெயர் கொண்ட பிரபலமான வீதி ஒன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து கடந்த 19ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தனது நண்பர்களுடன் பாடசாலைக்குச் செல்வதற்காக வீதியைக் கடக்க முற்பட்ட வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தின் போது மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்த அதேவேளை, அவருடன் சென்ற சக மாணவர்கள் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுவாதிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு புதிய தகவல்கள்!
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயார் - ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில...
பண்ணை பாலத்தில் தவறி கடலில் வீழ்ந்தவர் சடலமாக மீட்பு!
|
|