பிரான்ஸின் கடற்படை கப்பல் இலங்கை துறைமுகத்தில்!

Saturday, April 30th, 2016

பிரான்ஸின் கடற்படை கப்பலான ‘எகோனிட்’ நல்லெண்ண விஜயமாக நேற்று(29) கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கப்பலின் தலைவரான கெப்டன் லோரன்ட் மாசாட், இலங்கையின் மேற்குக்கரை கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடற்படை தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதேவேளை பிரான்ஸின் கப்பல் எதிர்வரும் 5ம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த காலப்பகுதியில், பிரான்ஸ் கப்பல் இலங்கை கடற்படையுடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பிராந்தியப் புரிந்துணர்வு, நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – நிதி அம...
பூரண தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் 30 க்கு பின்னர் அமுல் - சுகாதார சேவைகள் பணி...
பாதுகாப்பு செயலாளர் - அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் சந்திப்பு - இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத...