பிரபல பாடசாலை முறைமை நிறுத்தப்படுகின்றது?

நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொழில் வல்லுநர்களை உருவாக்கும் சிறந்த பாடசாலைகளை ஸ்தாபிக்க வேண்டும் என பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரபல பாடசாலை முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புளத்சிங்கள ஏகல்ஓய, வாராந்த சந்தை மற்றும் பொருளாதார நிலையத்தை நிர்மாணிப்பதற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அரச பல்லைக்கழகத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை போன்ற நம்பிக்கையை பெற அந்த நிறுவனம் தவறியுள்ளது.
மேலும் தனியார் பாடசாலைகளில் தேசிய பாடநெறிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் – மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எ...
உலகின் முன்னணி முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் நாடாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் – நீதி அமைச்சர் அ...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிற...
|
|