பிரபல பாடசாலையொன்றின் மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

nnnnnnnnnnnnnnn-82 Thursday, October 12th, 2017

பிரபல பாடசாலை ஒன்றின் மாணவனான நுமுதீத் ஆதித்ய (17 வயது) எனும் மாணவன் துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவனின் தந்தைக்கு சொந்தமான ‘போரா 12’ எனும் துப்பக்கியினாலேயே சுட்டுக் கொண்டுள்ளதாக பொத்தல பொலிசார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கின்றனர்.

காலி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவன், காலி, பொத்தல யோஹித மாவத்தையில் வடரக பிரதேசத்தினை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

நேற்று(10) மாலை குறித்த தற்கொலை இடம்பெற்றுள்ளதுடன், தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், தற்போது சடலம் காலி, கராப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டி வைத்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.


2018-01-18 09.41.30

வீணைச் சின்னம் என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான சின்னம்!…