பிரபல நடிகர் ரஜினிகாந்த் விபத்தில் காயம்!

Sunday, December 4th, 2016

சென்னையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்தின் காலில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2.0 என்ற படப்பிடிப்பு சென்னையின் புறநகர் பகுதியில் நடந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

_92821499_8920a09d-09ba-483e-835a-d0f100335868

Related posts: